அதள பாதாளத்துக்கு செல்லும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

இலங்கை ரூபாயின் மதிப்பு இதுவரையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இதுவரையில் 155.59 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 151.79 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 155.54 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய பவுண்ட் ஒன்றில் விற்பனை விலை 207.46 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

money001