பன்னீர் அணியும்,எடப்பாடி அணியும் இணைந்து பதவிகளை பங்கிட்டுக் கொண்டபோதும்,பன்னீர் தரப்பினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எல்லா மாவட்டங்களிலும் எடப்பாடியார் தரப்பு வைத்ததுதான் சட்டம். பன்னீர் தரப்பினர் தங்களுக்கு தரப்படும் சிறு சிறு வாய்ப்புகளுடன்
அமைதியாக இருக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
பன்னீர் தரப்பிலுள்ள சில சீனியர்கள் இதுபோன்ற நிலைமைக்கு எதிராக குமுறிக்கொண்டிருக்கின்றனர். நேற்று தனது குமுறலை வெளிக் கொட்டிவிட்டார் அவைத்தலைவர் மதுசூதனன்.கம்பிமேல் நடந்து ஆட்சி செய்துவரும் இடப்படிக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் செய்தி தொடர்பாளர் போல செயல்படும், தனது ஜுனியரான அமைச்சர் ஜெயக்குமாரை அவர் கிழி கிழி என கிழித்துவிட்டார். ஜெயக்குமார் கட்சி அமைப்புக்குள் தான்தோன்றித்த தனமாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அந்த தொகுதிவாசிதான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். தற்போது கட்சி உள்ள சூழ்நிலையில் மூத்த நிர்வாகிகள் பதவிக்கு வந்தால் தன்னுடைய நிலை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சர் ஜெயக்குமார் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.
காசிமேட்டில் சீன என்ஜின்கள் பயன்படுத்துவதற்கு எதிராக மீனவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் ஜெயக்குமார் சீன என்ஜின்கள் பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவர் மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குமுறினார் மது சூதனன்.
மற்ற சில மாவட்டங்களில் உள்ள பன்னீர் தரப்பினரும், மதுசூதனன் போல விரைவில் போர்க்கொடி தூக்க உள்ளார்கள் என்கிறார்கள் உட்கட்சி நிலவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்.






