5000 கோடியா? அதிரவைக்கும் சசிகலாவின் மாஸ்டர் பிளான்!

மருத்துவமையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய கணவரை பார்க்க வந்த மனைவிக்கு மேளதாளங்களுடனும்,ஆட்டம் பாட்டத்துடனும் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தார்கள் என்றல் அது சசிகலாவுக்காகத்தான் இருக்கும்.

இப்படி சமூகவலைத்தளங்களில் என்னதான் விமர்ச்சிக்கப்பட்டாலும் 5 நாள் ரோலில் வந்த நோக்கத்தையும் காரியங்களையும் முடிந்த அளவு நிறைவேற்றிவிட்டுதான் சென்றுள்ளார்.

201702111339503834_sasikala-angrily-speach-among-supporters_SECVPFஅவர் பரோல் முடிந்து சிறை செல்லும்போது மாஸ்டர் பிளான் ஒன்றினை தினகரனிடம் தெரிவித்து விட்டு சென்றதாக தகவல்கள் கசிந்துள்ளது.

எந்த நிலையிலும் இரட்டை இலை எடப்பாடி அணியினரின் கைக்குப் போய்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.சின்னம் இருக்கும் பக்கம்தான் தொண்டர்களும் இருப்பார்கள்.

இன்னும் ஓராண்டுதான் பாஜகவின் ஆட்டம்.2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது.நமக்கு சாதகமான காலம் வரும்.

துரோகிகளின் ஆட்சி நிலைக்கக்கூடாது.ஆட்சியைக் கலைத்து, இப்போதைக்கு இரட்டை இலையையும் முடக்க வேண்டும் என தினகரனிடம் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் எத்தனை கோடி கேட்டாலும் அதைக் கொடுத்து, வளைக்க வேண்டும். இதற்காக ஐயாயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை.

எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பேசி ஆட்சியைக் கலைக்க ஏற்பாடு செய்யுங்கள். யாரிடமும் அதிகாரத் தோரணையில் பேசாதீர்கள் என மாஸ்டர் பிளான் ஒன்றினை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.இதனால் எடப்பாடி தரப்பு மட்டுமின்றி பிஜேபி தரப்பும் பீதியடைந்துள்ளது.