எடப்பாடி உள்ளே.!! ஓபிஎஸ் வெளியே.!!அம்பலமான அரசியல்.!

அதிமுகவின் 46 வது ஆண்டு தொடக்க விழா அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியும் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அதன் பின்னர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தனர்.

ஆட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போன்று, கட்சி நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்க்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சிக்குள் பேசப்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம்.

ஆனால், அந்த நடைமுறை நேற்று கடைபிடிக்கப்படாததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு நிகழ்ச்சிகளைப் போலவே இந்த நிகழ்ச்சிக்கும் ஓபிஎஸ் வந்த பிறகே, இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி அதிமுக அலுவலகத்திற்கு வந்தார்.

அதைவிட அதிர்ச்சியான விசயம், முன்னதாக வந்த ஓபிஎஸ் கார் அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் அங்கேயே இறங்கி, அலுவலகத்திற்குள் நடந்து சென்றார்.

ஆனால், எடப்பாடியின் வாகனம், அதிமுக அலுவலக வாசலைத் தாண்டி உள்ளே வளாகத்திற்குள் சென்றது.

ops eps 5fsfநிகழ்ச்சி முடியும் வரை அவருடைய வாகனம் அலுவலக வளாகத்திற்குள்ளேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன், ஜெயலலிதா கார் மட்டுமே இது போன்று அதிமுக அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

அதன்பிறகு, சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பிறகு அவரது காரும், தினகரன் பொறுப்பில் இருந்தபோது அவரது காரும் ஒரு சில முறை இப்படி அலுவலக வளாகத்திற்குள் வந்தன.

அதன் பின்னர், இப்போது அதே முறையில் எடப்பாடி பழனிசாமியின் கார் மட்டும் உள்ளே நுழைந்துள்ளது.

ops 88rewஆனால், கட்சிப் பதவி அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஓ.பிஎஸ்-ஸின் காரை வெளியே நிறுத்திவிட்டு, இரண்டாம் இடத்தில் உள்ள எடப்பாடியின் கார் உள்ளே நுழைந்ததை ஓபிஎஸ் தரப்பினர் ஏக பொருமலுடன் பார்க்கிறார்கள்.

அதனோடு, அந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் தனித்தனியாக நின்றதை காண முடிந்தது.

எங்களுக்குள் பிரச்சனை இல்லை என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால், நேற்று நடந்த நிகழ்வு அதை பொய்யாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.