அடப்பாவமே இத்தனை நாளா இவளா கொடுமையா..? இது போல வேற என்னவெல்லாம் இருக்கோ..?

இந்திய எல்லையில் பணியாற்றும் வீரர்களின் அலைபேசி கட்டணத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் நிமிடத்திற்கு ரூ.5லிருந்து ரூ.1 ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

large_kashmir-modi-296மேலும், மாதந்தோறும் அலைபேசி கட்டணமாக ராணுவ வீரர்கள் செலுத்தும் ரூ.500 நாளை முதல் நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு ஊதியம் தவிர பேருந்து, ரயில், விமானத்தில் செல்ல சலுகைகள், இலவச தொலைப்பேசி வசதி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றால் தினப்படி உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது எம்.பிக்களுக்கு மாதந்தோறும் 50,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. பிற படிகளாக 45 ஆயிரம் முதல் 95 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

டெல்லியில் வசதி படைத்தோர்கள் இருக்கும் இடத்தில் வீடு ஒதுக்கல் என எம்.பிகளின் இந்த சலுகைகளும் சம்பளமும் பத்தாமல் போக இன்றைய உ.பி முதலவர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த சம்பளம் சரியானதா என ஆய்வு செய்தது மத்திய பாஜக அரசு.

யோகி ஆதித்யநாத் குழு எம்.பிக்களின் சம்பளம் பத்தாது, இன்னும் 100% உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்து இருக்கிறது.

அங்கே எல்லையில் மக்களின் உயிரை காக்க எல்லையில் போராடும் வீரர்களுக்கே இப்போது தான் கட்டண பிடித்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வளவு வருடங்களாக மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியல் ஆதாயதாரிகளுக்கு அள்ளி அள்ளி வீசுகிறது அரசு.

கல்லாவில் இருக்கும் பணத்தை கடை ஓனரே எடுத்து தாம் தூம் என்று செலவு செய்வதை போல, மக்கள் வரிப்பணத்தில் இருந்து நிரம்பிய அரசு கஜானாவிற்கு தாங்கள் தான் ஓனர் என்பதை போல நினைத்து கொண்டு அரசியல்வாதிகளின் ஆட்டம் தொடர்கிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், அரசு பிடிக்க வில்லையென்று மக்கள் நினைக்கும் பொழுது, சுவிஸ் போன்ற நாடுகளை போல திரும்ப அழைக்கும் முறையை கொண்டுவர வேண்டும்.

அப்போது தான் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் மக்கள் சக்தி இணைந்து தகுதியில்லாத பல அரசியல் களைகளை தூக்கி எறிய முடியும்.