இரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

இரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான கபில திசாநாயக்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

201704021240352134_Sri-Lanka-Navy-arrests-6-Indians-for-smuggling-drugs_SECVPF

இவர், உடதும்பரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் பேரில் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் விசேட ஆய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின்போது இவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதுடன், விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.