நடிகர் சூர்யா, ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்று அனைவருக்குமே தெரியும். தற்போது இவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திருமணத்திற்கு பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படத்தில் நடித்தார். இப்படம் மக்களால் அதிகமாக பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்களைப் பற்றின திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஜோதிகா தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு எனது கணவர் சூர்யாவிற்கு பின்பு எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்று முகநூல் லைவ்வில் தெரிவித்துள்ளார்.
சூர்யாவிற்கு பின்பு அண்ணியாகிய ஜோதிகா தனது பெயரைக் குறிப்பிடாமல் விஜய்சேதுபதி பெயரைக் குறிப்பிட்டுள்ளது கார்த்திக்கிற்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை அண்ணன் சூர்யாவிடமும், தனது மனைவியிடமும் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கும் ஜோதிகாவிற்கு ஜோடியாக விஜய்சேதுபதி நடிப்பதாகவும் கூறி வருகின்றனர்.