ஸ்ரீலங்காவை சிங்களவர்களே ஆட்சி செய்யமுடியும், ஸ்ரீலங்கா சிங்களவர்களின் நாடு என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போது அரசாங்கத்தினால் கொண்டுவர திட்டமிடப்பட்ட புதிய அரசமைப்பை தாம் ஓருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தெரிவித்த அவர் இதற்காக குறுகிய காலத்தில் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் கலகொட அத்தேச ஞானசார தேரர் தெரிவித்தார்.
சிறுபான்மை தலைவர்களிற்கு தற்போது உள்ள அரசமைப்பில் காணப்படும் குறைகள் என்வென கேள்வி எழுப்பியுள்ள அவர் சிறுபான்மை அரசியல் தலைவர்களை சந்தித்து இது தொடர்பில் கேள்வியெழுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.