மேஷம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய திறமைக் குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் உஷாராக இருங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைச்சுமை குறையும். உற்சாகமான நாள்.
கடகம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
சிம்மம்
மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி
எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அலைச்சல் அதிகமாகும் நாள்.
மகரம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமாகும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மீனம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதித்துக் காட்டும் நாள்.