பிணை முறி மோசடியினால் ட்ரில்லியனுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது : லக்ஸ்மன் யாபா அபேவர்தன

மத்திய வங்கி பிணை முறி மோசடியினால் ட்ரில்லியனுக்கும் மேல் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

download (3)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடியினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் நான் அச்சமின்றி கூறுவேன்.

இந்த நட்டம் பற்றி முன்னதாக கருத்து வெளியிட்ட போது எனக்கு கணக்கு தெரியாது என சிலர் கேலி செய்தனர்.

எனினும் எனக்கு நன்றாக கணக்கு தெரியும் வங்கியில் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு.

2015-2016ஆம் ஆண்டுகளில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் 25, 000 மில்லியன் லாபத்தை ஈட்டியுள்ளது. இதற்கு காரணம் வட்டி வீத அதிகரிப்பாகும்.

இந்த லாபத்தினால் 30 ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ட்ரில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியும் என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.