பிரித்தானியாவில் விசா கோருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் விசா இன்றி சுந்திரமாக பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

uk-flag2

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகிய பின்னர் புதிய நடைமுறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானிய நாட்டிற்குள் விசா இல்லாமல் பயணிப்பதற்கும், அந்நாட்டில் வசிப்பதற்கும், வேலை செய்வதற்கும் எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை.

எனினும் பிரித்தானியா விலகிய பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் வேலை செய்வதற்கும், படிப்பதற்கும், தங்குவதற்கும் பிரித்தானியாவில் அனுமதியை பெற வேண்டும் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டு மக்கள் வேலை செய்வதற்கும் விசாவிற்கு விண்ணப்பிக்காமல் பிரித்தானிய பயணிப்பதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.

எனினும் தற்போது ஐரோப்பிய ஒன்றிய பணியாளர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த பிரிவிலும் வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கைகளை பிரித்தானியா அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படலாம். பிரித்தானிய பணியார்களுக்கு முன்னுரிமை வழங்கி ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இந்த நேரத்திற்கான அறிக்கை எனவும், குடியேற்றக் கொள்கைகளை முறையாக வெளியிடுவோம் எனவும், பிரித்தானிய அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.