இலங்கையர்களுக்கு விசா அளிக்க மறுத்த நாடு கரணம் என்ன?

மத்திய கிழக்கு நாடொன்றினால் அறிமுகம் செய்யப்பட்ட உள்வருகை வீசா நடைமுறையில் இலங்கை புறக்கணிக்கப்பட்டிருந்து.

images (15)

அவ்வாறு இலங்கை நிராகரிக்கப்பட்டதன் காரணம் என்னவென்பது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் 80 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு வீசா இன்றி உள் வருவதற்காக, கட்டார் அதன் கதவுகளை திறந்து விட்டது. எனினும் அந்த பட்டியலில் இருந்து இலங்கை தவிர்க்கப்பட்டது.

ஈரானுடன் நெருக்கமான உறவுகளை பேணுதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஜூன் மாதம் முதல் கட்டார் நாட்டை புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில் கட்டார் செல்லும் சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்பு தேடிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பாரியளளவில் குறைவடைந்துள்ளது.

இதன்காரணமாக கட்டாருக்கான சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக, உள் வருகை வீசா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டார் சுற்றுலா அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் தங்கியிருப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் 180 நாட்கள் வீசாவும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா உட்பட 47 நாடுகளுக்கு 30 நாள் வீசாவும் வழங்கப்படவுள்ளன.

எப்படியிருப்பினும், இலங்கை இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளி விபரங்களின்படி 2016 ஆம் ஆண்டு 59,527 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளமையே இதற்கு காரணமாகும்.

இதேவேளை வீசா தொடர்பான முடிவுகள் ஒரு நாட்டின் இறையாண்மை உரிமையாகும். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அடிப்படையிலானது என இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.