சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்த செயல் : 5 பேர் பலி 50 பேர் மாயம்

ஏமன் நாட்டின் கடல் பகுதியில் கப்பலில் பயணம் செய்தவர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளிவிட்டனர்.
boat
ஏமன்,
ஏமன் நாட்டின் கடல் பகுதியில் நேற்று ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 180 பேர் சிறு கப்பலில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அவர்களை சோமாலியா கடல் கொள்ளையர்கள் வழிமறித்து அவர்கள் சென்ற கப்பலில் ஏறி கொள்ளையடிக்க முயன்றனர். இதை பார்த்ததும் சர்வதேச பாதுகாப்பு ரோந்து படையினர் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் கொள்ளையர்களை சரணடையும்படி கூறினர். ஆனால் கடல் கொள்ளையர்கள் எங்களை விட்டு சென்றுவிடுங்கள், இல்லாவிட்டால் அனைவரையும் கடலில் தள்ளிவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே அந்த கப்பலில் இருந்த 180 பேரையும் கடலில் தள்ளி விட்டனர். இதனால் ரோந்து படையினர் பின்வாங்கினர். மேலும் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த கடல் கொள்ளையர்கள் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர். கடலில் தள்ளிவிட்டதில் கடலில் மூழ்கி 5 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் மாயமானார்கள். மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
இதேபோல நேற்று முன்தினம் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 120 பேரை கடலில் தள்ளிவிட்டதில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் 22 பேர் மாயமானார்கள். இந்த செயலுக்கு ஐ.நா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் சர்வதேச குடியேற்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.