யாழ். சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
25 வயதான இளைஞர் ஒருவரே நேற்று(04) மதியம் வீட்டில் தூக்கிட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







