இந்தியக் கிரிக்கெட் அணியை வெறுப்பேற்றுவது பிடிக்கும் என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்

இந்தியக் கிரிக்கெட் அணியை வெறுப்பேற்றுவது பிடிக்கும் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படையாக கூறியுள்ளார்.

download (21)

கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்த அவுஸ்ரேலிய அணி, மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் அவுஸ்ரேலிய அணி தோல்விக்கண்டது. ஆனால் கடுமையாக போராடி இரண்டாவது போட்டியை சமநிலையை செய்தது.

இத்தொடரின் போது ஸ்மித், ஆட்டமிழந்த போது ஓய்வறையில் உள்ள வீரர்களின் உதவியை நாடிய விவகாரம் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான இத்தொடர் குறித்து ஸ்மித் நினைவுக்கூர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை சற்றே எரிச்சலடையச் செய்யுமாறு சிலபல உத்திகளைத் தான் கடைபிடிப்பதுண்டு.

வாய் வார்த்தையாக ஏதேனும் கூறுவதை விட எனது சிலபல செய்கைகள் மூலம் இந்திய அணியை வெறுப்பேற்றுவது பிடிக்கும். சிலபல தருணங்களில் நான் இந்திய அணியை இவ்வாறு வெறுப்பேற்றியிருக்கிறேன், அது நன்றாகத்தான் இருந்தது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி தொடர் வாக்குவாதங்கள் நிரம்பிய ஒரு தொடர், போட்டியை இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அங்கு விளையாடியதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்” என கூறினார்