கணவன் மீது மனைவிக்கு இருக்கும் உரிமைகள்

உலக அளவில் பெண்களுக்கான தனி சுபாவம், குணாதிசயங்கள் என சில பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட, நமது பாரம்பரியத்தின் சாயலாக நம் நாட்டு பெண்களுக்கு கணவன் மீதான உரிமை என்பது கொஞ்சம் எல்லை தாண்டியது தான். இதை எல்லை தாண்டிய சுபாவம் என்று கூறுவதை விட, எல்லை தாண்டிய காதல் என்று கூறலாம். ஆம், கரைபுரண்டு ஓடும் பெண்களின் காதல் தான் உரிமைக் கொண்டாடுதலாக என காணப்படுகிறது….

மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக இருந்தாலும் தனது கணவனை வேறு பெண்கள் புகழ்வதை விரும்ப மாட்டார்கள். பெரிதாக தங்கள் கணவன் சாதித்திருந்தாலும் கூட வேறு பெண்கள் புகழ்ந்தால், மனைவிகளுக்கு வயிற்றில் கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்யும்.

என் கணவனை அடிக்கவும், உதைக்கவும், திட்டவும், கொஞ்சவும் என அனைத்திற்கும் தனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்பது இந்திய பெண்களின் குணம். இது ஒருவகையில் இந்திய பெண்களின் கலாச்சாரம் என்று கூட கூறலாம்.

உரிமை கொண்டாடுதல் ஆங்கிலத்தில் நாம் கூறும் Possesiveness, பெண்களுக்கு அதிகம் தான். சில சமயத்தில் மற்றவர்கள் இது கொஞ்சம் ஓவர் என்று கூறலாம். ஆனால், இது அதிகப்படியான காதலின் வெளிபாடு என்பது தான் உண்மை. ஆண்களை விட, கோபத்தையும், காதலியும் மிக அதிகமாக வெளிப்படுத்தும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. எனவே, இதை எந்த தருணத்திலும் உதாசீனம் செய்துவிட வேண்டாம்.

பொதுவாக நமது தமிழக தாய்களின் வளர்ப்பு முறையும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. “புருஷன முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கடி..” என்று கூறி வளர்ப்பது உண்டு. இல்லையேல் கணவன் வேறு பெண் மீது ஆவல் கொண்டுவிடுவான் என்று கூறுவார்கள். இது உண்மையும் கூட. ஆண்களுக்கு போக போக எந்த வேலையாக இருந்தாலும் சலிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, பெண்கள் தான் ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவின் வளர்ப்பு என்று கூறினாலும், பெண்களின் பொதுவான இயல்பே இது தான் என்றும் கூறலாம். ஆம், பொதுவாகவே குழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி அவர்கள் மீது தாய்மை அடைந்த பெண்ணானவள் அதிகமான உரிமை கொண்டாடுவாள். இது பெண்களின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்று.

தாங்கள் உரிமை கொண்டாடியும் ஆண்கள் விலகி விலகி சென்றால், கணவன்மார்கள் மனைவியின் காளி சொரூபத்தை காண வேண்டிய கட்டாயம் நேரிடும். இவை அனைத்துமே அவர்கள் தங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு தான் என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சில ஆண்கள், தங்கள் மனைவி தன் மீது அதிகம் உரிமை கொண்டாடுவதை, சுதந்திரமாக செயல்பட தடையாக இருப்பதாக கருதுவது உண்டு. உண்மையில், பெண்கள் உங்கள் மீது உரிமையாக இல்லை என்றால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

பழங்களை எப்போது சாப்பிடுவது??

கடன் வேண்டுமா? CASH-e செயலி வந்தாச்சு!!

எப்படிப் பணம் பெறுவது?
CASH-e செயலியை பதிவிறக்கம் செய்து, அதனை பேஸ்புக் மூலம் லாக்கின் செய்ய வேண்டும்.
CASH-e நிறுவனத்தின் மூலம் பணம் பெற விரும்பினால் முதலில் பேஸ்புக் கணக்கில் இருக்கும் நண்பர்கள் பட்டியல் (Friends list) மற்றும் அவர் பதிவிட்ட பதிவுகளை ஆய்வு செய்யப்படுகிறது.
பின்னர் கடன் கொடுக்கலாமா? எவ்வளவு கொடுக்கலாம் என கணக்கிடப்படுகிறது.
CASH-e நிறுவனம்:
CASH-e நிறுவனத்தின் தலைவர் ரமண குமார், தனது ஹெல்த்கேர் பிபிஓ சிபே சிஸ்டம்ஸ் நிறுனத்தை ஜேபி மோர்கன் ஒன் ஈக்விட்டுப் பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்து விட்டு இந்நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
சமுக வளத்தளத்தில் பயன்பாட்டின் படி ஒருவரின் கிரேடிட் ரேடிங் மதிப்பிடப்படும் முறையை அறிமுகம் செய்து பின்னர் கடன் கொடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடனுக்கான வட்டி:
CASH-e நிறுவனம் துவங்கப்பட்டு 7 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்நிறுவனம் இளம் பட்டதாரிகளுக்கு மட்டும் குறுகியகாலக் கடன் வழங்குகிறது.
CASH-e நிறுவனத்தில் 15-90 நாட்கள் வரையிலான கடன் வழங்கப்படும். இதற்கு 30-36 சதவீதம் வரையிலான வட்டி விதிக்கப்படுகிறது.
அதிகச் சோஷியல் கிரேடிட் ரேடிங் கொண்டவர்களுக்கு 15 சதவீதம் என்ற வட்டி நிற்ணயிக்கப்படுகிறது. கடன் பெறும் வாய்ப்பும் இரட்டிப்பாகிறது.
வர்த்தகம் நிலை:
நிறுவனம் துவங்கி 7 மாதங்களே ஆன நிலையில் 10,000 வாடிக்கையாளர் தொடர்ந்து இந்நிறுவனத்தின் வாயிலாகக் கடன் பெற்று வருகின்றனர்.
தினமும் இந்நிறுவனம் 20 லட்சம் ரூபாய் அளவிலான கடன் அளித்து வருகிறது.
ஆவணங்கள்:
கடன் பெற, ஆர்பிஐ அறிவுறுத்தல்கள் படி பான்கார்டு, ஆதார் கார்டு, பே ஸ்லிப், வங்கி அறிக்கைகள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

தமிழர்களை கொச்சைப்படுத்துகிறதாம்: கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக புகார்

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. இதனை ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார். படம் பல்வேறு பிரச்னைகளை தாண்டி இப்போது ரிலீசாகிறது. இந்த நிலையில் இந்தப் படம் தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துகிறது, அதனால் படத்துக்கு தடை விதியுங்கள் என்று தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பு முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் “பல கட்சிகள் இருந்தாலும் முதலில் எந்த கட்சியிடம் பணம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுவதுதான் தமிழர் பண்பாடு, கலாச்சரம்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. பணம் வாங்கி கொண்டு ஓட்டுப் போடுவது என்பது தமிழர்களின் கலாச்சாரம் என்பதை அந்த வசனம் குறிப்பிடுகிறது. இது உலகமெங்கும் வாழும் தமிழர்களை கொச்சைப்படுத்தி அவர்களின் கவுரவம், நேர்மையை சிதைப்பதாக உள்ளது. எனவே படத்தை தடை செய்வதோடு அதன் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக் கணவர்களிடம் மாட்டி பணம், பொருள், உயிர் அனைத்தையும் இழக்கும் பரிதாப நடிகைகள்..!

திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை சபர்ணாவின் தற்கொலை தான் தற்போது திரையுலகிலும், சீரியல் உலகிலும் பரபரப்பாக பேசப்படுகிற ஒரு  விஷயமாக ..ஆபத்து நிறைந்த விஷயமாகவும்  இருக்கிறது.

என்ன காராணம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்கமும் கொஞ்ச சீரியஸாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன அழுத்தம், பணப்பிரச்சனை, காதல் தோல்வி முக்கியமாக கல்யாணம் ஆன நடிகர்கள், தொழில் அதிபர் மகன்கள் அரசியல்வாரிசுகள் இவர்களின் வலைகளில் எளிதாக சிக்கி விடுகின்றனர்..!

அவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விடுகின்றனர்..! உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கோரும் ‘அந்த’ நேரத்து வார்த்தைகளை உண்மை என்றே நம்பி விடுகின்றனர்..!

எல்லாம் முடிந்து போனதும் அந்த அப்பாவி நடிகையை ஏமாற்றி ஒதுங்க ஆரம்பித்து விட நடிகைகள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் செத்துப் போகும் முடிவிற்கு தள்ளப் படுகின்றனர்..!

பல்வேறு காரணங்களுக்காக இதற்கு முன்னர் பல நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சோபனா என்கிற அற்புதமான நடிகை அப்படி ஒருவரை நம்பி பணம் பொருள் எல்லாம் இழந்தவர் தான்..!

உயிராக நேசித்த ஒருவர் நடுத்தெருவில் நிறுத்தி விட்டதை அந்த அபலைப் பெண்ணால் தாங்க இயலவில்லை..! பரிதாபமாக இறந்து போனார்..!

ஏராளமான டிவி சீரியல்களிலும் ஐந்தாம் படை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகர் சாய் பிரசாத்   இந்த ஆண்டு மார்ச் மாதம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சீரியல் நடிகை வைஷ்ணவி கடந்த 2006ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்த இரண்டாவது நாளில் இவரது மறைவுக்கு காரணமான சீரியல் நடிகர் தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

சரி தொடர்ந்து இப்படி பட்ட சோகங்கள் நடந்து கொண்டே இருக்க சங்கம் இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதோ அல்லது அறிவுரைகள் சொல்லி திசை மாற்றவோ எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுத்ததே இல்லை..!

பரிதாபம்..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க வேண்டும்: நமீதா

சோனியா அகர்வால் மற்றும் புதுமுகங்கள் சந்தோஷ் கண்ணா, காயத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘சாயா.’ இந்த படத்தை வி.எஸ்.பழனிவேல் இயக்கி தயாரித்து உள்ளார். சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் நடிகை நமீதா கலந்து கொண்டு பேசியதாவது:-

“சமூக கருத்தை சொல்லும் படமாக சாயா தயாராகி உள்ளது. அரசியலும் சினிமாவும்தான் சமூக விஷயங்களை சார்ந்து இருக்கின்றன. இவற்றின் மூலமாகத்தான் சமூகத்துக்கு நல்லது செய்ய முடியும். அதனால்தான் நான் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறேன். கல்வி அதிக செலவு கொண்டதாக மாறி இருக்கிறது. குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது முக்கியம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் சமூகத்தில் நிறைய நடக்கின்றன. நம் அருகில் இருந்தும் கூட இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இவை தடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும். நல்லது கெட்டது பற்றி அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல டியூசன் கொடுத்தால் மட்டும் போதாது. நிறைய நல்ல விஷயங்கள் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்பதையும் சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள். நிறைய கேளுங்கள். இதை அம்மா, அப்பா இரண்டு பேருமே செய்ய வேண்டும்.”

இவ்வாறு நமீதா பேசினார்.

விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பேசும்போது, “சினிமா விழாக்களுக்கு என்னை அழைத்தால் நான் கலந்துகொள்ள தவறுவது இல்லை. இந்த படத்தில் நடித்துள்ள சோனியா அகர்வால் இங்கு வரவில்லை. பட விழாக்களுக்கு பிரபலங்களை அழைக்கும்போது சாக்குபோக்கு சொல்லி தவிர்த்து விடுகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. விழா நடத்துபவர்களின் வலிகளை புரிந்து கொண்டு விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.

நடிகர் கராத்தே ராஜா, நடிகை வசுந்தரா, தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல், இசையமைப்பாளர் ஏ.சி.ஜான்பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிர்வாண படத்தை காட்டி சீரழித்த 4 பேர்..! குழந்தையை பெற்றெடுத்து உயிரை விட்டாள் இளம்பெண்..! இது பேஸ்….

ஷிவமொக்காவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சித்தார்த் என்ற பொறியியல் பட்டதாரிக்கும் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பால் சித்தார்த் தன்னுடைய செல்போனில் இளம்பெண்ணின் நிர்வாண படத்தை எடுத்து இருந்தான்.

இந்த படத்தை சித்தார்த்தின் நண்பன் வினய் யதேச்சையாய் பார்த்து விட்டான். இதனை காட்டி அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தான் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் வினய் பெங்களூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு இளம்பெண்ணை அறிமுகப்படுத்தினான்.

நாகராஜ் செல்போனில் உள்ள நிர்வாண படங்களை மாயமந்திரம் மூலம் எடுத்து விடுகிறேன் என கூறி நம்ப வைத்துள்ளான். மேலும் நைசாக பேசி நாகராஜூம் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால் அந்த பெண் கர்ப்படைந்துள்ளாள். எனவே நாகராஜை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய அவளது பெற்றோர் அந்த பெண்ணை வீட்டை விட்டு விரட்டினர். இந்த சர்ந்தர்ப்பத்தில் கிரண் என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்தது.

நாகராஜூடன் சேர்த்து வைப்பதாக கூறி கிரண் பெங்களூருக்கு அழைத்து சென்றான். அங்கு நாகராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. மேலும் கிரணும் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஷிவமொக்கா மாவட்டம் ரிப்பன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கிரண், சித்தார்த், நாகராஜ் மற்றும் வினய் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வாரம் இந்த பெண்ணுக்கு ஷிவமொக்கா மெக்கன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடன் இளம்பெண்ணின் உடல் மோசம் அடைந்தது. மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

ரூ.500,1000: நடிகர் விஜய் அதிரடி பேட்டி!!!

அச்சமின்றி புத்தம் புதிய திரைப்படம் – ட்ரெய்லர்

ஈமைசடங்கின் போது இறந்தவர் உயிருடன் எழும்பியதால் பீதியடைந்த மக்கள்!

கோபுர உச்சியில் 2நாள் ஒளித்து விளையாடிய காதல் ஜோடி!!கையும்மெய்யுமாக அகப்பட்டது!!

மொட்டை கோபுரத்தில் காதல்ஜோடி 2 நாள் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் உலக புகழ்பெற்ற, யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது.

இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோயில் முன்புறம் மொட்டை கோபுரம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து உருக்குலைந்துள்ளது.

அந்த மொட்டை கோபுரத்தில் 2 நாள் முழுவதும் இளம் காதல்ஜோடி தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியதாவது,

நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் கோயிலின் கிழக்கு திசையில் இருட்டில் இரு உருவங்கள் நடமாடியதை பார்த்தோம்.

அங்கு சென்றபோது இரு உருவங்களும் மறைந்து விட்டன.

இதனால் சந்தேகமடைந்த கோயில் பிரகாரம் முழுவதும் தேடினோம்.

ஆனால் எங்கேயும் காணவில்லை.

அப்போது கிழக்கு திசையில் காலடி சத்தம் கேட்டது, அங்கு சென்றபோது, பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, பராமரிப்பு இல்லாமல் செடிகள், மரங்கள் முளைத்துள்ள பகுதியிலிருந்து சத்தம் வந்தது.

இதனால் பொதுமக்கள் செல்போன் லைட் உதவியுடன் தேடிப்பார்த்த போது 20 வயது வாலிபரும், 19 வயது இளம்பெண் ஒருவரும், இருப்பதை கண்டு திடுக்கிட்டோம். பொதுமக்களை பார்த்ததும் காதலர்கள் செய்வதறியாது விழித்தபடி நின்றனர்.

அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண், தாராசுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும், வாலிபர், கும்பகோணத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருவதாகவும் கூறினர்.

மேலும் அவர்கள் கடந்த 2 நாட்களாக கோயில் மொட்டை கோபுரத்தில் தங்கியிருந்ததாகவும் கூறினர்.

பின்னர் இருவரையும் கோயில் வளாகம் பகுதிக்கு அழைத்து வந்தோம்.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையறிந்ததும், அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

அவர்களை தேடியபோது, தாராசுரம் பேருந்து நிலையத்தில் இருவரும் இருப்பது தெரியவந்தது.

அங்கிருந்து இளம்பெண்ணை மட்டும் பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மைத்திரியிலும் சந்தேகப்படும் ஐநா!!!

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான குழுவின் துணைத் தலைவர் Felice Gaer,

இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்களே ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கடந்த 2012 தொடக்கம் 2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதி வரையில்,பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருக்கும் கைதிகளை பொலிஸார் சித்திரவதைக்கு உட்படுத்துகின்றார்கள் என பொலிஸாருக்கு எதிராக 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனகோண்டா பாம்பின் பிடியில் சிக்கிய மனிதர்கள் திக்திக் நிமிடங்கள்

நகரும் படிக்கட்டில் தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்த குழந்தை! அதிர்ச்சி வீடியோ

சூப்பரான மீன் – உருளைக்கிழங்கு குருமா

தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் – 500 கிராம்
உருளைக்கிழங்கு – 2 சிறியது
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

அரைக்க  :

தேங்காய்த் துருவல் – கால் கப்
முந்திரிபருப்பு – 10

செய்முறை :

* மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள் கால்டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரைடீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.

* மிக்சியில் தேங்காய் துருவல், முந்திரியை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும்.

* தக்காளி நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அப்போது தான் மசாலா வாடை போகும்.

* இப்போது நறுக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்க விடவும்.

* அடுதது அரைத்த தேங்காய் விழுது, தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்க்கவும்.

* ரெடியான குருமாவில் பொரித்த மீனை போடவும். உப்பு சரி பார்க்கவும். சிம்மில் இரண்டு நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

* சுவையான மீன் – உருளைக்கிழங்கு குருமா ரெடி.

* ரைஸ், சப்பாத்தி, ஆப்பத்துடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

சிம்பு-தனுஷ்க்கு இடையே சண்டையா- உண்மையை உடைத்த முன்னணி இயக்குனர்

தமிழ் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கான போட்டி நடிகர்களாக சிம்பு-தனுஷை தான் கூறி வருகின்றனர். இவர்கள் நடிப்பில் சமீபத்தில் வந்த கொடி, அச்சம் என்பது மடமையடா இரண்டு படங்களும் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரையும் இயக்கிய கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சினிமாவிற்கு வெளியில் பலரும் சிம்பு-தனுஷ் நண்பர்களாக இருந்து பிரிந்துவிட்டனர் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால், உண்மை அவர்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், தனுஷ் எப்போதும் சிம்பு படம் குறித்து ஆவலாக கேட்டு தெரிந்துக்கொள்வார்.

அதனால், பேசுபவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல முடியாது’ என கூறியுள்ளார்.

சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதினா

புதினா கூந்தல், சருமத்திற்கு நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம்.

இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டி, பொடுகை தடுக்கும். புதினா எண்ணெய் சில துளி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் மசாஜ் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

புதினா சாறு
எலுமிச்சை சாறு
தயிர்

இது இயற்கை முறையில் சருமத்தி சுத்தம் செய்கிறது. சோர்வு மற்றும் பொலிவிழந்த சருமத்தை உடனடியாக பளிச்சிட செய்கிறது. புதினா சாறு, தயிர் தலா 1 ஸ்பூன் எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை படிப்படியாக மறைந்துவிடும். இதை தினமும் உபயோகப்படுத்தலாம்.

முகப்பரு இருக்குமிடத்தில் செயல் புரிந்து கிருமிகளை அழிக்கிறது. முகப்பரு மீது தடவுங்கள். ஆனால் முகப்பரு உடைந்திருந்தால் அதன் மீது தடவ வேண்டாம். ஏனென்றால் இது பாதிப்பை அதிகப்படுத்தும்.

நாட்டு சர்க்கரை 1 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் அதனுடன் புதினா சாறு 2 ஸ்பூன் கலந்து ஸ்கரப்பாக முகத்தில் தேய்த்தால் அழுக்கு, இறந்த செல்கள் வெளியேறி சருமம் ஜொலிக்கும்.

ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து அதனுடன் புதினா எண்ணெய் சில துளி கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் வறண்ட கூந்தல் பொலிவு பெறும்.

22 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: மனதை உலுக்கும் காரணம்

இந்தியாவின் டெல்லி மாநகரில் தன்வசம் இருந்த ரூபாய் நோட்டை மாற்ற முடியாத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் திகதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதாக அறிவித்ததில் இருந்து பல விநோதமான சம்பவங்களும் சோக சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இடைவிடாத பணியின் காரணத்தால் வங்கி காசாளர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவமும் நேற்று நடந்துள்ளது.

இந்நிலையில் 4000 ரூபாய் மதிப்பு கொண்ட 500 ரூபாய் தாள்களை 100 ரூபாய் தாள்களாக மாற்ற முடியாத டெல்லியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த ரிஜ்வானா என்ற 22 வயது பெண் கடந்த இரண்டு நாட்களாக தன்னிடம் இருந்த ரூ.4000 மதிப்பு கொண்ட ரூ.500 நோட்டுக்களை மாற்ற வங்கியில் வரிசையில் நின்றுள்ளார்.

ஆனால் இரண்டு நாட்களிலும் வங்கியில் மணிக்கணக்கில் காத்திருந்தும் போதிய இருப்பு இல்லாத காரணத்தால் அவருக்கு ரூ.100 நோட்டு கிடைக்கவில்லை

இதனால் அவர் வீட்டில் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், இதனால் நேற்று திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் சுற்றும் மோடி ஒரு முறை இந்தியா சுற்றி வரட்டும்: சீமான் கண்டனம்

உலகம் முழுவதும் சுற்றிய மோடி, ஒருமுறை இந்தியாவை முழுமையாகச் சுற்றிவரட்டும், அப்போது தான் சாதாரண மக்களின் சிரமம் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கறுப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கையில் நமக்கு எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் அதைச் செயல்படுத்த அவர் எடுத்த நடவடிக்கையில் துளியும் உடன்பாடில்லை.

அவரின் அவசரகதியான முடிவால் நாட்டு மக்கள் அத்திவாசியத் தேவைகளுக்குக்கூடப் பணமில்லாது அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இது எதையுமே அறியமுடியா மாய உலகிலிருக்கும் நமது பிரதமர், ஊழல் செய்தவர்கள் எல்லாம் வங்கி வாசலிலே நிற்பதாகவும் ஏழைகள் நிம்மதியாக உறங்குவதாகப் பிதற்றியிருக்கிறார்.

உலகம் முழுவதும் சுற்றிய மோடி, ஒருமுறை இந்தியாவை முழுமையாகச் சுற்றிவரட்டும். எந்த வங்கி வாசலில் ஊழல்வாதிகள் நிற்கிறார்கள்? எந்தத் தானியங்கி இயந்திர மையத்தின் வாசலில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கால்கடுக்கக் காத்துக் கிடக்கிறார்கள்? எந்த பாமர மக்கள் மகிழ்ச்சியோடு இந்த அறிவிப்பை வரவேற்கிறார்கள்? எனக் காட்டட்டும்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வாழ்க்கையை நகர்த்த முடியாது வேதனையின் விளிம்பில் நிற்கும் வேளையில் மோடியின் இதுபோன்ற அபத்தக் கூச்சல்கள் மக்கள் படும் துயரங்களை எள்ளி நகையாடுவதாக உள்ளது.

நாடு முழுமைக்கும் முதியவர்கள், விவசாயிகள், அன்றாடங்காய்ச்சிகள், மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் எனச் சமூகத்தின் அங்கமாக இருக்கும் பல கோடி மக்களும் மிகுந்த அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை 16 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், நமது பிரதமரோ இது எதனையும் சிறிதும் கவனத்திற்கொள்ளாமல் உண்மைக்கு மாறாகப் பேசி கட்டமைக்க முயல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது .

நேற்றைய உரையில் பிரதமர் மோடி ஊழல் செய்யும் பணக்காரர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.

எப்போதும் உயர் அடுக்குப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, குண்டு துளைக்காத காரிலும், தனி விமானத்திலும் பயணிக்கும் மோடிக்கு யாரிடமிருந்து அச்சுறுத்தல்? கறுப்புப் பணம் விவகாரத்தினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என எந்த உளவுத்துறை சொன்னது? பிரதமருக்கே அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்குப் பெரு முதலாளிகளின் கை ஓங்கியிருக்கிறதென்றால், நாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

பெரு முதலாளிகள் கையிலா? ஆட்சியாளர்கள் கையிலா? சாதாரண ஒரு அரசியல் பிரமுகருக்கு அலைபேசியில் குறுஞ்செய்தியின் மூலம் விடப்படும் அச்சுறுத்தலுக்கே உரியவர்களைக் கைதுசெய்யும் நாட்டில், பிரதமருக்கே அச்சுறுத்தலை விடுபவர்களை இன்னும் ஏன் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் பிரதமருக்கே இங்கே உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் தன் உயிருக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்க முடியும் என்று ஒரு சாதாரணக் குடிமகன் கவலையுற மாட்டானா? அனைத்து அதிகாரத்தையும் கொண்டிருக்கும் நாட்டின் தலைமையச்சரே இதுபோலப் புலம்பலாமா? இதுதானா அகண்ட மார்பு கொண்ட மோடியின் ஆளுமைத்திறனும், நிர்வாகத்திறமையும்? இரு நாட்களில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள் என அறிவித்துவிட்டு, இப்போது 50 நாட்கள் அவகாசம் கேட்கிறார் ‘வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர்’.

ஏற்கனவே, ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டெடுப்பேன் எனக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டாகிவிட்டது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, ‘தானியங்கி இயந்திரங்கள் செயல்பட மூன்று வாரங்கள் ஆகும்’ என்கிறார்.

புதிய 2,000 ரூபாய் தாளின் அளவு முன்னம் இருந்த தாள்களின் அளவில் இருந்து மாறுபட்டு உள்ளது. ஆகவே தானியங்கி இயந்திரத்தில் இப்போது வைக்க இயலாது என அறிவிக்கும் மத்திய நிதியமைச்சகம், இதனை முன்கூட்டியே சிந்திக்காதது ஏன்? இந்த அடிப்படை ஆய்வைக்கூடச் செய்யாமல் புதிய நோட்டை அவசரகதியில் வெளியிட்டதால் இதுவரையிலும் வீணான மனித உழைப்பிற்கும், வணிகத் தேக்கத்திற்கும், இனி வரும் 50 நாட்களில் ஏற்படப் போகும் பாதிப்பிற்கும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

‘தன்னைத் தீவைத்து கொளுத்தினாலும் கறுப்புப்பணத்தை ஒழிக்காது விடமாட்டேன்’ என முழங்கும் மோடி தனது கட்சி யாரிடமிருந்தெல்லாம் தேர்தல் நன்கொடை வாங்கியது என்ற தகவலை வெளிப்படையாகச் சொல்ல மறுப்பதன் பின்னணி என்ன? இன்று இந்தத் திடீர் அறிவிப்பு மூலம் கறுப்புப்பணத்தை ஒழித்துவிடலாம் எனக் கூக்குரலிடுகிறது பாஜக .

ஆனால் ஏறக்குறைய இதே திட்டத்தை 2005ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரசு அரசு கொண்டுவர முற்பட்டபோது, ‘இத்திட்டம் பணக்காரர்களுக்கானது இதன்மூலம் ஏழைகள்தான் பாதிக்கப்படுவார்கள்’ என்று பாஜகவின் அப்போதைய செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லெகி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பாஜாகவின் இவ்விரண்டு நிலைப்பாடுகளில் எது உண்மை? சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்போரின் பட்டியலை காங்கிரசு வெளியிட மறுக்கிறது எனக் குற்றஞ்சாட்டிய பாஜக, இன்றைக்கு அதே பட்டியலை வெளியிட மறுப்பதன் பின்புலம் என்ன? தனது தான்தோன்றித்தனமான முடிவால் நாடு முழுமைக்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலையைச் சமாளிக்கவே மேடையில் கண்ணீர் சிந்தி, வீட்டைத் துறந்து தான் வாழ்வதாகக் கூறி நாடகமாடி நடிப்புத் திறமையை வெளிக்காட்டுகிறார் பிரதமர் மோடி.

இந்நாடு பல நடிகர்களை அரசியல்வாதிகளாக உருவாக்கியும் பல அரசியல்வாதிகளின் நடிப்பையும் பார்த்து வருகிறது. ஆகவே பிரதமர் மோடி அவர்கள் இதை எல்லாம் கைவிட்டுக் கறுப்புப் பணத்தை மீட்பதற்கான ஆக்கப்பூர்வமான வேலையைத் தொடங்கட்டும். ஏனென்றால், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணம் 17 லட்சம் கோடிதான். ஆனால், அந்நிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் இதனைவிடப் பலமடங்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.

மோடி தனது பேச்சில் குறிப்பிட்டது போல தனது இன்னொரு முகத்தை அந்நிய வங்கிகளில் பதுக்கி வைத்திருப்போரின் மீது காட்டட்டும். அப்பாவி உழைக்கும் மக்கள் மீது காட்ட வேண்டாம்.

இந்தத் தாள் மாற்றத்தினால், தனது சரிந்த பிம்பத்தை நிலை நிறுத்தவும், உத்திரப்பிரதேசத் தேர்தலில் அரசியல் இலாபத்தைப் பெறவும்தான் முடியுமே ஒழிய, வேறு எந்தச் சமூக சீர்திருத்தத்தையும் தன்னால் சாத்தியப்படுத்த இயலாது எனப் பிரதமருக்கே தெரியும்.

அது தெரிந்தும் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என முழங்குவதெல்லாம் ஏமாற்று வேலை. நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாது, ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் தனியார் மய, தாராளமய கொள்கையைக் கடைபிடிக்கும் அரசு, தனிப்பட்ட முதலாளிகளிடம் கறுப்புப் பணம் சேர்கிறது என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

தனியார் முதலாளிகள் லாபத்தேவைக்கு வருவார்களா மக்கள் சேவைக்கு வருவார்களா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு நாட்டின் உயிர்நாடியான கல்வியை மருத்துவத்தைத் தனிப்பெரும் முதலாளிகளில் கையில் கொடுத்துவிட்டு, மனிதன் வாழ உயிர்நாடியான தண்ணீரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டு வெறும் ரூபாய்த் தாளை மாற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.

தனியார்மயத்தைத் தளர்த்தி, தாராளமயத்தைத் தளர்த்தி, தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து, மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற நிலை வரும் பொழுதுதான் இந்நாட்டில் சமநிலை சமுதாயம் உருவாகி கருப்புப்பணம் ஒழியும் என்று கூறப்பட்டுள்ளது.

மட்டகளப்பில் பொலிஸாருடனும் விகாரதிபதி வாக்கு வாதம்…!

மட்டகளப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்கு விகாராதிபதி ஒருவர் வந்து புத்தர் சிலை வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதால் அங்கு கொஞ்சம் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பகுதியில் பொலிஸார் குவிந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

இதன்போது பொலிஸாருடனும் விகாரதிபதி வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், குறித்த விகாராதிபதி தொல் பொருள் தினைக்களம் இதற்கான முடிவை நிச்சயம் பெற்றுதர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.