சூப்பரான மீன் – உருளைக்கிழங்கு குருமா

தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் – 500 கிராம்
உருளைக்கிழங்கு – 2 சிறியது
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

அரைக்க  :

தேங்காய்த் துருவல் – கால் கப்
முந்திரிபருப்பு – 10

செய்முறை :

* மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள் கால்டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரைடீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.

* மிக்சியில் தேங்காய் துருவல், முந்திரியை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும்.

* தக்காளி நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அப்போது தான் மசாலா வாடை போகும்.

* இப்போது நறுக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்க விடவும்.

* அடுதது அரைத்த தேங்காய் விழுது, தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்க்கவும்.

* ரெடியான குருமாவில் பொரித்த மீனை போடவும். உப்பு சரி பார்க்கவும். சிம்மில் இரண்டு நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

* சுவையான மீன் – உருளைக்கிழங்கு குருமா ரெடி.

* ரைஸ், சப்பாத்தி, ஆப்பத்துடன் பரிமாற சூப்பராக இருக்கும்.