கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

குறித்த தகவலை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.

போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக சாருக தமுனுகல (Charuga Damunugala) குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில், உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு போலி செய்திகள் வரக்கூடும். இதன் மூலம் நீங்கள் பரிசுத் தொகையை வென்றதாகக் கூறலாம்.

பல்வேறு சலுகைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை நீங்கள் பெறலாம்.

இதுபோன்ற செய்திகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரலாம். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைபர் தாக்குதல்
இதற்கிடையில், சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணைத்தளம் குறித்து சாருக தமுனுகல தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சைபர் தாக்குதல் குறித்த இணையத்தளத்தில் உள்ள பல பலவீனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் இதை விரைவில் வழமைக்கு கொண்டுவருவோம் என சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.

ஆனந்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றியதும் கண் முழித்த அம்மா

அன்பு அம்மா எப்படியாவது கண்விழித்து விட வேண்டும் என்பதற்காக ஆனந்தி நேர்த்தி கடன் நிறைவேற்றுகிறார்.

சிங்க பெண்ணே

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கதாநாயகிக்காக உண்மையான காதலூடன் காத்திருக்கும் இரண்டு நாயகர்களை கொண்டு நகர்த்தப்படுகின்றது.

ஆனந்தியை பணக்காரரான மகேஷும், ஏழை வீட்டு பையனான அன்புவும் காதலிக்கிறார்கள். எதுவும் அறியாத பாவப்பட்ட பெண்ணாக இருக்கும் ஆனந்தி இதனை எப்படி சமாளிக்கிறார் என்பதனையே கருவாக வைத்து இந்த கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் ஆனந்தியை கடத்துவதற்காக இரண்டு பேர் பாதையில் காத்திருக்கிறார்கள். அப்போது அந்த வழியில் வரும் அன்புவின் அம்மாவை கண்டதும் என்ன ஆனாலும் அவரிடம் சென்று பேசுவோம் என்ற தைரியத்துடன் அவர் நேரில் செல்கிறார்.

நேர்த்தி கடன் நிறைவேற்றும் ஆனந்தி
இந்த நிலையில், ஆனந்தி அன்பு அம்மாவுக்கு வந்த ஆபத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என முயற்சி செய்தார். ஆனாலும் ஆனந்தி சொல்வதை கேட்காமல் அன்பு அம்மா செய்த தவறு அவரை தற்போது மருத்துவமனையில் படுக்க வைத்துள்ளது.

அவரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும் அன்புவின் குடும்பத்திற்கு உதவிச் செய்ய வேண்டும் என்றும் ஆனந்தி ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்.

சிகி்ச்சைக்கு முன்னர் ஆனந்தி அன்பு அம்மாவை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது அன்புவை காதலிப்பதாகவும், அன்பு அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளப்போவதாகவும் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து அன்பு அம்மா எப்படியாவது கண்விழித்து விட வேண்டும் என்பதற்காக கோயிலில் நேர்த்தி கடன் நிறைவேற்றுகிறார். அவர்கள் அங்கு செய்யும் வழிபாடுகள் காரணமாக அன்பு அம்மா கண்விழிக்கிறார்.

அத்துடன் ஆனந்தியின் பிராத்தணைகளால் கண்விழித்த மாமியாரை பார்ப்பதற்காக ஆனந்தி மருத்துவமனைக்கு வரும் போது அன்பு, ஆனந்தியின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியாகியுள்ளது.

 

மூட்டு வலிக்கு தீர்வாகும் சூப்

தற்போது காலநிலை மிகவும் குளனிராக மாறி உள்ளது இதில் பல லுக்கும் ஏதாவது சூடாக சுவையாக குடிக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இது உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

நமது எலும்பு வலுவடைந்து பல நன்மைகள் உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் ஆட்டுக்கால் சூப் குடிப்பது நன்மை தரும்.

ஆனால் இதை எப்போதும் செய்வது போல செய்யாமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குத் தகுந்ததை போல செய்வது அவசியம். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால் – 250 கிராம்
வெங்காயம் – 1/2 கப்
தக்காளி – 1
மிளகு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 3
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் மல்லி விதை, மிளகு, சீரகம் இவை மூன்றையும் எண்ணெய் இல்லாமல் தனி தனியாக வறுத்து எடுக்க வேண்டும். பின் அவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு மையாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது எடுத்து வைத்த ஆட்டுக்காலை தீயில் சுட்டுக் கொள்ள வேண்டும். அதன்பன்னர் ஒரு குக்கரில் ஆட்டுக்கால், தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து 15 விசில் விட்டு வேக வைக்கவும்.

அதன்பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு அதில் வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக வத்க்கவும். அதன் பின் குக்கரில் வேகவைத்த ஆட்டுக்காலை தண்ணீருடன் சேர்த்து கொள்ளுங்கள்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் மசாலாவையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்க வேண்டும்.

இதன்படி செய்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார். இதை மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் குடித்துவர உடல் ஆரோக்கியதாக இருக்கும். மூட்டு வலியும் நீங்கும்.

எல்லைப் பாதுகாப்பை இறுக்கமாக்கும் கனேடிய அரசு!

எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோத போதை பொருட்கள் எல்லை பகுதிகள் ஊடாக கடத்தப்படுவது தொடர்பில் ட்ரம்ப் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக கனடிய அரசாங்கமும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஓர் கட்டமாக அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய அரசாங்கம் சட்டவிரோதக் குடியேறிகள் எல்லை தாண்டி பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்துவதற்கான மூலோபாயங்களை வகுத்து வருகின்றது.

உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி எல்லை தாண்டி அத்துமீறி பிரவேசிப்போரை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுக்கும் எச்சரிக்கை!

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்துகிறது.

போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்களில், உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு போலி செய்திகள் வரக்கூடும். இதன் மூலம் நீங்கள் பரிசுத் தொகையை வென்றதாகக் கூறலாம். பல்வேறு சலுகைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை நீங்கள் பெறலாம். இதுபோன்ற செய்திகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரலாம். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டாம்.”

இதற்கிடையில், சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணைத்தளம் குறித்து சாருக தமுனுகல தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

“இந்த சைபர் தாக்குதல் குறித்த இணையத்தளத்தில் உள்ள பல பலவீனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இதை விரைவில் வழமைக்கு கொண்டுவருவோம்”

திடீர் சுகயீனம் உயிரிழந்த மாணவன்!

கற்பிட்டி பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 ல் கல்வி பயிலும் எம் மஸாப் என்ற மாணவன் வியாழக்கிழமை (16) பாடசாலையில் வைத்து திடீர் சுகவீனம் உற்ற நிலையில் உடனடியாக மாம்புரி வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேற்படி உயிரிழந்த மாணவனின் சடலம் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மின் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!

துப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது.

அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்திருந்தது.

இருப்பினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு எதிர்மறையான முன்மொழிவைச் சமர்ப்பித்தது.

அதன்படி, அந்த முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் ஆலோசனை செயல்முறை கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கி ஜனவரி 10 ஆம் திகதி முடிவடைந்தது.

குறித்த அமர்வுகளின் போது சுமார் 400 நபர்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை பரிசீலித்தபோது, ​​மின்சாரக் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, அந்த திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு மின்சார கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? இல்லையா? அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை சதவீதமாக இருக்கும்? பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நாளை (17) வெளியிட திட்டமிட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 17.01.2025

மேஷம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும்‌. உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்

எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்‌. நிதானம் தேவைப்படும் நாள்.

கன்னி

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

துலாம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீரகள். வாகன வசதிப் பெருகும்‌. உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

தனுசு

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும்‌ வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்

மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.

மீனம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. அதிர்ஷ்டமான நாள்.

சீன ஜனாதிபதிக்கு அநுர அழைப்பு!

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கு வருகை தருமாறு சீன ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அங்கு பல்வேறு தரப்பினருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தோடு, இது தொடர்பிலான கூட்டறிக்கை தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

மேலும் பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான பொதுவான புரிதல்களை எட்டியுள்ளதாக கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு!

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் நாளை(17.01.2025)பருத்தித்துறை கடலில் கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்

நாளை 17.01.2025 காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

23.2NM north east of ppd

Coordinate (s)of the location

09°55’N:080°42E

09°55N:080°36E

09°51N:080°42E

09°51N:080°36E. ஆகிய கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காரைதீவில் விபுலானந்த கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு!

காரைதீவு பிரதேச சபையின் விபுலானந்த கலாச்சார மண்டபத்தின் மேற்தளத் திறப்பு விழா இன்று (16) வியாழக்கிழமை சபையின் செயலாளர் அ. சுந்தரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

உள்ளுராட்சி உதவி நன்கொடை நிதியுதவியில் 5 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அந்த அழகிய மண்டபத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி. ஆணையாளர் கமல் நெத்மினி திறந்து வைத்து கலந்து சிறப்பித்தார் .

அதிதிகளாக கல்முனை கட்டிடங்கள் திணைக்கள திட்ட பொறியாளர் பி. அச்சுதன் , காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் கலந்து சிறப்பித்தார்கள்.

விழாவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதேச சபையின் ஆலோசனை குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அதிதிகளுக்கும் கட்டட ஒப்பந்ததாரர் திரு.குமாருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

திறப்பு விழாவில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.சசிக்குமார் எம்.இஸ்மாயில் எஸ்.நேசராசா எம்.றனீஸ் மற்றும் உள்ளூராட்சி ஊழியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இரு பேருந்துகள் மோதி விபத்து மாணவர்கள் மூவர் காயம்!

தங்காலை – வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்க விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம் (16) தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் 788,468 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் (16) 797,647 ரூபாவாக அதிகரித்துள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 28,140 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 225,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 25,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 206,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,630 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று (21 karat gold 8 grams) 197,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவில் மோட்டர் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைப்பு!

முல்லைத்தீவு (Mullaitivu) – மல்லாவி, கல்விளான் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கே நேற்றிரவு (15) இனந்தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீயூட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் “மில்கோ – ஹைலண்ட் பால்மா” உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

இலங்கை “மில்கோ – ஹைலண்ட் பால்மா” உற்பத்திப் பொருட்களை யாழ்.குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது.

யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் “ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வாகன இறக்குமதியால் ஏற்ப்படப்போகும் அபாய நிலை!

வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரூபாவின் பெறுமதியை பாதுகாப்பது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayaka) தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இன்று(16) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது, ஏற்றுமதியையும் சீராக பேணினால் ரூபாவின் பெறுமதியை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அவ்வாறு இல்லையெனில், நாட்டின் டொலர் கையிருப்பு பாதிக்கப்படும். அது மக்களை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுசெல்லும்.

நாங்கள் வாகன இறக்குமதிக்கு எதிரானவர்கள் அல்ல. எனினும், எமது கருத்தை வெளிப்படுத்தியமைக்கு நாங்கள் வாகன இறக்குமதியை தடுக்கின்றோமா என கேள்வி எழுப்பினார்கள்.

நாட்டின் டொலர் கையிருப்புக்கு ஆபத்து ஏற்படாது இருப்பின் வாகன இறக்குமதி நல்லது என்பதையே நாம் சுட்டிக்காட்டினோம். இரவில் நாம் விழுந்ததை போல் பகலில் விழ வேண்டும் என அவசியமில்லை.

வெளிநாட்டு விஜயம்
இதேவேளை, ஜனாதிபதி இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

எம்மால், கிணற்றுத்தவளை போல செயற்பட முடியாது. எனவே, ஜனாதிபதி பல நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதை நாம் வரவேற்கின்றோம்.

ஏனைய நாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தும் என்றால் அவை வரவேற்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை குற்றவாளி இந்தியாவில் கைது!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பிணை நிபந்தனையை மீறி, இந்தியாவுக்கு தப்பிச் சென்ற இவரை, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய பொலிஸாருடன் இணைந்து இலங்கை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட பொடி லெசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 291.38 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354.58 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 368.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.04 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 310.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.72 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.25 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 188.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வேலைவாய்ப்பு!

இலங்கை நிபுணர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக இந்த சந்திப்பில் தூதுவர் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய அரபு இராஜ்ஜிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தற்பொழுதுள்ள புதிய அரசியல் போக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமேரி , கடந்த காலங்களில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சுமார் 150,000 இலங்கையர்கள் பணியாற்றுவதாகவும் எதிர்காலத்தில் இந்த வேலை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் இலங்கை நிபுணர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் காலித் நாசர் அல் ஆமேரி தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு அழைப்பு
இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தயாராக இருப்பதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பாக புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள விரும்புவதாகவும் தூதர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இது வாய்ப்பாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து அமைச்சரின் அறிவிப்பு!

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் யாரும் வீணாக அச்சப்பட தேவையில்லை எனவும் மக்களின் தரவுகளை இந்திய நிறுவனத்துக்கோ இலங்கை நிறுவனத்துக்கோ கையாள முடியாது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weerarathna) தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் நேற்று (15) ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமே அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதாகும். அதன் பிரகாரம் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இறுதியில் அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதன் பிரகாரம் அனைத்து புதிய தேசிய அடையாள அட்டைகளும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாறும்.

தற்போது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இந்த அடையாள அட்டை முறையை நடைமுறைப்படுத்துவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 20 பில்லியன் ரூபாவாகும். நிதிச் சுமையைச் சமாளிக்க இந்தியாவின் உதவியின் மூலம் இந்த செலவில் பாதியை ஈடுகட்ட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை முன்முயற்சியில் இந்திய நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசியல் உள்நோக்கங்களுடன் செய்யப்படும் ஆதாரமற்ற கூற்றுக்களால் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முயற்சிக்கான உயிரியல் தரவு, பலராலும் கூறப்படுவது போல் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அது தொடர்பில் யாரும் அச்சப்பட தேவையில்லை. டிஜிட்டல் அடையாள அட்டையின் தொழில்நுட்ப அமைப்புக்கு மட்டுமே இந்திய நிறுவனம் எங்களுடன் சம்பந்தப்படுகிறது.

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் முன்னாள் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனத்திற்கு அணுகலை வழங்கியது, ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அந்த ஒப்பந்தம் திருத்தப்பட்டது.

திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்திய நிறுவனம் தொழில்நுட்ப அமைப்புக்கு மட்டுமே உதவும். உயிரியல் தரவைப் பதிவேற்றும் போது இலங்கைக்கு மட்டுமே இந்த அமைப்பை அணுக முடியும்.

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை முன்முயற்சியின் கீழ், கைரேகைகள், முகத்தை அடையாளம் காணுதல் மற்றும் கருவிழி அடையாளம் காணுதல் ஆகிய மூன்று முக்கிய தரவுகள் மட்டுமே உயிரியல் தரவுகளாக சேகரிக்கப்படும்.

அத்துடன் இந்த அடையாள அட்டை கட்டமைப்பை அரசாங்கமும் இலங்கையில் தனியார் நிறுவனமும் இணைந்தே மேற்கொள்ள இருக்கிறது. எவ்வாறு இருந்தாலும் இந்திய நிறுவனமோ இலங்கை நிறுவனமோ மக்களின் தரவுகளுக்குள் கை வைக்க முடியாது. அரச அதிகாரிகளே அதுதொடர்பில் செயற்படும்.

ஆள்பதிவு செய்யும் அதிகாரிகள் தற்போது மக்களின் தரவுகளை கையாள்வது போன்றே டிஜிட்டல் முறையிலும் இடம்பெறும். அதனால் டிஜிட்டல் அடையாள அட்டை நடவடிக்கையில் எமது தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என தெரிவித்தார்.