கனடா நாட்டில் தனிநபர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த அரசு உதவித்தொகையுடன் தற்போது 100 டொலர் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா நாட்டில் உள்ள பிரித்தானிய கொலம்பிய மாகாண அரசு தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய மாகாணத்தில் NDP கட்சி சார்ப்பாக முதலமைச்சராக பதவி வகித்து வரும் John Horgan என்பவர் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் வறுமையில் உள்ள தனிநபர் ஏற்கனவே 610 டொலர் வரை அரசு வருமான உதவித்தொகையை ஒவ்வொரு மாதமும் பெற்று வருகிறார்.
தற்போது இந்த உதவித்தொகை 710 டொலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த அரசு உதவித்தொகை தற்போது 1,133 டொலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுக்குறித்து John Horgan வெளியிட்ட அறிக்கையில் ‘தேர்தல் நேரத்தில் தங்களது கட்சி கூறிய வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளோம்.
எதிர்வரும் செப்டம்பர் 20-ம் திகதி முதல் இந்த வருமான உதவித்தொகை அதிகரிப்பு அமுலுக்கு வருகிறது.
பிரித்தானிய கொலம்பிய மாகாணத்தில் வசித்து வரும் குடிமக்களின் வறுமையை போக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக’ John Horgan தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் ஆட்சி செய்து வந்த லிபரல் கட்சி அரசு வருமான உதவித்தொகையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.