வித்தியா கொலைச்சம்பவம்; பதவி இழக்கிறார் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியில் இருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

லலித் ஜயசிங்கவை பணியில் இருந்து நீக்குமாறு கூறி பொலிஸ் மா அதிபரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி அவர் பணி நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன்படி இந்த பணி நீக்கமானது இன்று முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் மஹாலிங்கம் ஷசிகுமார் தப்பிச்செல்ல உதவியதாக குற்றம்சுமத்தப்பட்ட லலித் ஜெயசிங்க கடந்த 15ம் திகதி குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதி செய்யப்பட்டார்.

அவர் வரும் 25ம் திபதி வரையில் நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.