சச்சினுக்காக உலக கோப்பையே விலைக்கு வாங்கப்பட்டதா..? 2011ல் இந்தியா வென்ற கோப்பை பறிபோகும் அபாயத்தில்… ஐ.சி.சியில் திடீர் பரபரப்பு..!

1983 ஆம் ஆண்டில் கபில்தேவ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிண்ணம் வென்ற பிறகு, தோணி தலைமையிலான அணி மட்டுமே இரண்டாவது முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி கிண்ணம் வென்றது.

அப்போது சச்சின் அந்த உலக கோப்பையோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

இதனால் எப்படியாவது இந்த கோப்பையை வென்று சச்சினுக்கு பரிசளிக்க வேண்டும் என்று இந்திய அணியினர் முனைப்புடன் செயல்பட்டனர்.

இறுதி ஆட்டத்தின் போது ஆரம்பத்தில் இலங்கை கையில் ஆட்டம் இருந்தாலும், திடீரென்று இந்தியாவின் கைக்கு மாறியது.

இந்த சந்தேகம் அப்போது எழ வில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பூதகரமாக உருவெடுத்துள்ளது.

பைனலில் இந்தியாவிடம் இலங்கை தோற்ற விவகாரத்தில் மர்மம் இருப்பதாக இலங்கையின்  முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்த தகவல் படி, சச்சினுக்கு உலக கோப்பையை பரிசளிக்க வெளியிலிருந்து இலங்கை அணியிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

இதில் நேரடியாக இந்திய அணியினர் ஈடுபடவில்லை என்றும் முற்றிலும் சச்சின் மீது தீவிர பற்று கொண்டவர்களால் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறப்படுகிறது.

அவர்கள் சார்பாகவே இலங்கை அணியினரிடம் பேசப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கொழும்புவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயசேகரா,

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை உத்தரவிட தயாராக உள்ளதாகவும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உகந்ததாகும் என்று தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு இந்திய அணியின் மீது ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டு விட்டால் அந்த ஆண்டிற்கான  இந்திய அணியின் கோப்பை இலங்கை வசம் போக வாய்ப்பு உள்ளது.