சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் கிளெர்ந்தெழுந்த மக்கள்..! -(வீடியோ)

சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் கிளெர்ந்தெழுந்த மக்கள்..! -(வீடியோ)

பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கிளிநொச்சியில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று (புதன்கிழமை) முற்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

”போலித்தேசியம் பேசாதே புலிகளை வைத்துப் பிழைக்காதே!”, ”சமூக வேறுபாடுகளை உருவாக்காதே சமூக உறவைக் குலைக்காதே!”, ”வயிற்றுப் பிழைப்புக்கு வடக்கத்தையானா?”, ”ஒற்றுமையைக் குலைக்காதே – சமூக உறவினைச் சிதைக்காதே!”, ”பாரபட்சங்களை உருவாக்காதே சமூகப் பிளவுகளை உண்டாக்காதே”, ”வடக்கத்தையான் என்று சொன்னதை வாபஸ் வாங்கு – வரலாற்றுத் தவறுக்கு வருந்தித் தலைவணங்கு” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியொருவர் இவ்வாறு ஒரு சமூக மக்களை தரம் தாழ்த்திப் பேசுவதை அனுமதிக்க முடியாதென தெரிவித்ததோடு, சமூக நீதியையும் விடுதலையையும் விரும்புவோர் அனைவரும் இந்த நீதியற்ற செயலைக் கண்டிப்பதாக குறிப்பிட்டார்.

padamas சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் கிளெர்ந்தெழுந்த மக்கள்..! -(வீடியோ) padamasIMG_0310 சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் கிளெர்ந்தெழுந்த மக்கள்..! -(வீடியோ) IMG 0310

IMG_0334 சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் கிளெர்ந்தெழுந்த மக்கள்..! -(வீடியோ) IMG 0334