னுஷ்கா ஷர்மாவுடன் அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடும் விராட் கோலி

இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். இவருக்கும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்காவிற்கும் இடையில் காதல் இருந்து வருகிறது. 2015-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பெரும்பாலான போட்டிகளை நேரில் வந்து கண்டுகளித்தார். விராட் கோலி சதம் அடித்ததும் கேலரியில் இருந்த அனுஷ்கா ஷர்மாவிற்கு பறக்கும் முத்தம் கொடுத்து அசத்தினார்.

2015 உலகக்கோப்பை அரையிறுதியில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை இந்தியா சேஸிங் செய்யும்போது, விராட் கோலி ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது அனுஷ்கா ஷர்மான கேலிரியில் அமர்ந்து இருந்தார். அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி சுற்றுவதால்தான் மோசமாக விளையாடுகிறார் என ரகிசர்கள் கடும் விமர்சனம் செய்தனர். அதன்பின் இருவரும் ஒன்றாக சுற்றுவது கிடையாது. இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

ஆனால், அவர்களுடைய காதல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. சமீபத்தில் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படத்தின் பிரத்யேக காட்சிக்கு இருவரும் ஒன்றாகத்தான் வந்தனர்.

இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியை முடித்த பின்னர் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. பின்னர் வீரர்கள் அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள்.

அமெரிக்காவில் தங்கியுள்ள விராட் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் பொழுதை கழித்து வருகிறார். இதற்கு முன் ஒருமுறை இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்ற வதந்தியும் கிளம்பியது. இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நடக்கும்போது கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிவிப்போம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.