ஒரு கட்டத்தில் 36லட்சத்தை ஏமாந்த ரெஹேனா – ரஹ்மானின் ரியாக்க்ஷன் என்ன ?

re

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் சுஹாசினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் கலந்து கொண்டார். இதில் பல சுவையான விஷயங்களை பகிந்தர்.

அதுமட்டுமில்லாமல் ரஹ்மான் அக்கா தங்கைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக ரெஹேனா ரஹ்மானை பற்றி ஒரு நெகிழ்வான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். ரஹ்மான் வளர்ந்து வரும் காலத்தில், பைனான்ஸ் பொறுப்பை என்னிடம் தான் கொடுத்தார் , கேரளாவிலிருந்து ஒரு ஆடியோ கம்பெனி எங்கள் பாடல்களின் உரிமை கேட்டனர்.

அப்போது இந்த தொழில் கடன் கொடுக்கும் பழக்கம் இருந்ததால் நானும் கடன் கொடுத்துக்கிட்டு இருந்தேன், ஒரு சமயம் கிட்டத்தட்ட 36லட்சத்தை ஏமாற்றி விட்டு ஓடிவிட்டார்கள் அந்த ஆடியோ கம்பெனி உரிமையாளர்கள்.

எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ரஹ்மான் கோபப்படுவாரோ என்று நினைத்தேன், அந்த பணம் ஏமாந்தது பற்றி அறிந்தும் பெரிதாக கவலை படாமல் அடுத்த வேலைக்கு சென்று விட்டார். ரஹ்மான் இப்போது வரை என்னிடம் அதை பற்றி கேட்டது இல்லை. அதற்கு நான் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்றார்