![]()
இந்தியாவில் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன இருபத்தி இரண்டாவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் வென்ற தங்க பதக்கம் இலங்கை வீராங்களை நிமாலியிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் போட்டி தூரத்தில் முடிவு எல்லையின் போது தமக்கு ஓடுவதற்கு இடையூறு விளைவித்தாக நிமாலி செய்த முறைப்பாட்டினை மேல் பரிசீலினை செய்து அர்ச்சனா ஆதவினை தகுதிநீக்கம் செய்யப்பட்டு பதக்கம் பறிக்கப்பட்டது.
இதனடிப்படையில் போட்டியின் வெற்றியாளராக நிமாலி வலிவர்ஷா கொண்டா தங்கப்பதக்கத்தையும் கஜந்திகா துஷாரி வெள்ளிப்பதக்கத்தையும் ஜப்பான் வீராங்கனை புமிகா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






