
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகள் சந்திக்கும் இடத்தில்,
இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவும் சூழ்நிலை உருவாகி வருகிறது..
சிக்கிம் மாநில எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவம், இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்ததால் தொடங்கியது பிரச்சனை..
அதனால் முன் எச்சரிக்கையாக, சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களை இந்தியா அங்கே குவித்துள்ளது…
இதேபோல்பதிலுக்கு சீன ராணுவமும் தனது வீரர்களை குவித்து உள்ளது. இதனால் சிக்கிம் மாநில எல்லையில் போர் நிலவும் சூழ்நிலை உருவாகி வருகிறது..
இந்த நிலையில் திடீர் என சீனா, எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் என இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது…
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
இந்தியா, சீன அரசின் அழுத்தத்துக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை என கூறியுள்ளது..
சீன ராணுவத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வரை இப்போதுள்ள நிலையை இந்தியா கடைபிடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.






