முதன் முறையாக விண்ணில் பாய்ந்த கானா செயற்கைகோள்

முதன் முறையாக விண்ணில் பாய்ந்த கானா செயற்கைகோள்

அக்ரா:

அட்லாண்டின் கடலில் உள்ள மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடு கானா. இந்த நாடு முதன் முறையாக செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அதன் பெயர் கானாசாட்-1. இதை கொபோரிடுயாவில் உள்ள சர்வதேச நாடுகள் பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்துள்ளனர்.

இது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டது. விண்ணில் பாய்ந்து நிலை நிறுத்தப்பட்டவுடன் அங்கு கூடியிருந்த என்ஜினீயர்கள், ஊழியர்கள் என 400 பேர் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த விண்கலம் ரூ.4 கோடி செலவில் 2 வருடங்களாக உருவாக்கப்பட்டது.

இதற்கு ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஜாசா’ உதவி செய்தது. இந்த செயற்கைகோள் மூலம் கானா நாட்டின் கடற்கரை பகுதியை கண்காணிக்க முடியும். மேலும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பம் மேம்படுத்த உதவும்.