வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று இடம்பெற்றது.
பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகின்றது நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்.
கடந்த யூன் மாதம் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது.
நேற்றையதினம் சப்பை ரத திருவிழா இடம்பெற்றது.
நாளையதினம் தீா்த்த உற்சவமும், இறுதிநாள் தெப்பத்திருவிழாவும் இடம்பெறும்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புலம்பெயா் நாடுகளில் இருந்தும் அம்மனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.










