நிறைய பேர் இந்த தலைப்பை பார்த்ததும் எடைக்கும் உருளைக்கிழங்குக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பீர்கள்? ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் ஒன்றாக பார்த்து இருக்க முடியாது. நீண்ட காலமாக சொல்லப்படும் விஷயம் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நாம் குண்டாகி விடுவோம் என்பது தான். இதைப் பற்றிய குழப்பங்களும் மக்களிடையே இருந்து வருகிறது. இங்கே உருளைக்கிழங்கு உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்றால் இதை எண்ணெய்யில் வறுத்தோ பொரித்தோ சாப்பிடக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.ஆமாம் நீங்கள் எண்ணெய்யில் பொரித்து உணவுகளை சாப்பிடும் போது கண்டிப்பாக உங்கள் எடையை அதிகரிக்கிறது. பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் போன்றவை உடல் நலத்திற்கு தீங்கானது. எனவே உங்கள் உடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை வேக வைத்து சிறந்த முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.