ஜி.எஸ்.டி. விவசாயிகளின் தலை விதியை மாற்றும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் யோகி பேசுகையில், ”நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விவசாயிகளின் தலை விதியை மாற்றும். இந்த புதிய வரி சீர்திருத்தம் ஊழலை ஒழித்துக் கட்டும். பொருட்களின் விலை மலிவாக மாறும். இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தில் இருந்து வியாபாரிகள் விடுதலை அடைவார்கள்” என்று கூறினார்.
முன்னதாக, ஜூன் 30 நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.