வடக்கின் நிலையான அமைதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற் றுமை மிகவும் அவசியமாகும். ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
தற்போதைய நிலைமையில் தனித்து கட்சியமைத்து செயற்பட முயற்சிக்க வேண்டாம் என வட மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இந் தியா ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வடக்கிற்கான முதலாவது பயணத்தை இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து கடந்த வியாழக்கிழமை மேற் கொண்டார். இதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளு நர் ரெஜினோல் குரே உள்ளிட்ட வட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனை தனியாக சந்தித்த உயர் ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவதை இந்தியா விரும்ப வில்லை என்ற விடயத்தை உறுதிபட தெரிவித்துடன் ஒற்றுமையை தொடர்ந்தும் பாதுகாத்து கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் ஒரு மேடைக்கு அழைத்து இராப்போசன விருந்தினையும் வழங்கியுள்ளார்.
வட மாகாண சபை அமைச்சர்கள் சிலரின் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கையின் பின்னர் கூட்டமைப்பிற்குள் இரு தரப்பு மோதல்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும் கொண்டுவரப்பட்டது. இறுதி நேரத்தில் மோதல்கள் சமரசம் அடைந்தன. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையில் பனிப்போர் தீவிரமடைந்துள்ளது.
மறுபடியும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வலுவாக முன் வைப்பது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெறுவதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறான மோதல்கள் கட்சியை பிளவுபடுத்துவதாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.







