செல்வம் விரும்புவோர் சொல்ல வேண்டிய அனுமன் ஸ்லோகம்

கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. இலங்கையைப் பார்த்து வியந்த ஆஞ்சநேயர் கூறியது. அன்றாடம் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.

யா ஹி வைஸ்ரவணே லசஷ்மி: யாசேந்த்ரே-ஹரிவாஹனே
ஸா ராவண க்ருஹே ஸர்வா நித்யமேவானபாயிநீ
யா ச ராஜ்ஞ: குபேரஸ்ய: யமஸ்ய: வருணஸ்ய:ச
தாத்ருஸீ தத்விஸிஷ்டா வா ருத்தீ ரசேஷா க்ரு ஹேஷ்விஹ
ஸ்வர்கோயம் தேவலோகோம் இந்த்ரஸ்யேயம் புரீ பவேத்
ஸித்திர் வேயம் பராஹி ஸ்யாதித்யமன்யத மாருதி:

சுருக்கமான பொருள்: குபேரன், இந்திரன், வருணன் போன்றவர்களின் வீடுகளைக் காட்டிலும் அதிக அளவில் இந்த இலங்கையில் திருமகள் வசிக்கின்றாள். இது சொர்க்கமா? தேவலோகமா? தவத்தின் பயனா?.