ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் அடையும் கைது நடவடிக்கைகள்

ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இஸ்லாமிய நாட்டுடன் தொடர்புகளைப் பேணியதாகவும், தீவிரவாதத்தை தூண்டியதாகவும் மேலும் தீவிரமயமாதலைப் போதனை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி மற்றும் பிரித்தானியப் பொலிசாரோடு இணைந்து ஸ்பெயின் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Palma de Mallorcatpyயில் நான்கு பேரும் பிரித்தானியாவில் ஒருவரும் ஜெர்மனியில் மேலும் ஒருவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளின் பொலிஸ் படைகள் இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய முகவர் நிறுவனங்களைப் பயன்படுத்தி, குற்றங்களை எதிர்த்துப் போரிடுவதில் யூரோபோல், யூரோஜஸ்ட் மற்றும் சிரின் ஆகிய துறையினருக்குத் தகவல்களைத் தந்துதவுவதற்காக, இணைந்து செயல்பட்டதாக பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் வன்முறையான உள்ளடக்கத்துடன் கூடிய காணொளிகளை இளைஞர்களிடையே பகிர்ந்து கொண்டதுடன், மோதல் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று மோதல்களில் ஈடுபடுவதற்காக ஆட்களை சேர்க்க திட்டமிட்ட இரகசிய கூட்டங்களை வாராந்தம் ஏற்பாடும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.