விமர்சனங்களை தாண்டி வென்றவர் தானே சிம்பு

சிம்பு எப்போதும் ஒரு சர்ச்சை வலையத்திற்குள் சுற்றி வருபவர். இல்லையென்றால் அவரை சுற்றி ஒரு சர்ச்சை வலையங்கள் உருவாக்கப்படும்.

சென்னை மாநகரமே தண்ணீரில் மிதந்தது, அடுத்த வேலை உணவிற்காக ஒவ்வொரு மக்களும் போராடும் சமயத்தில் கூட, எதற்கும் சம்மந்தமே இல்லாத பீப் சாங்கை எடுத்துக்கொண்டு மாதர் சங்கம் போராடியது.

முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாக எதற்காக இவர்கள் எல்லாம் சிம்புவை அன்று டார்கெட் செய்தார்கள் என்று குழந்தைக்கும் தெரியும்.

ஓடி ஓடி உதவும் குணம், வெளிப்படையான பேச்சு, தைரியமான முடிவு என சிம்பு எப்போதும் ஒரு திறந்த புத்தகம் தான், இதில் அவரின் வெளிப்படையான பேச்சு, தைரியமான முடிவு இது தான் விமர்சனங்களுக்கு ஆளாகும்.

எத்தனையோ குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கும், கல்விக்கு அவர் ஓடி ஓடி உதவிய கதை எல்லாம் ஒருவருக்குமே தெரிய வாய்ப்பில்லை, அவரும் அதை எந்த ஒரு இடத்திலும் சொல்லியது இல்லை, நான் கெட்டவனாகவே இருந்துட்டு போறேண்டா என்பது தான் சிம்புவின் மனநிலை.

சிம்பு தமிழ் சினிமாவில் முதல் சிங்கிள் ட்ராக் என்ற முறையை கொண்டு வந்தவர், விஜய் மட்டுமே நடனத்தில் கலக்க, இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களை கவரும்படி தன் விறுவிறு நடனத்தால் அதிர வைத்தார் சிம்பு.

கோவில், வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, போடா போடி, தொட்டி ஜெயா, அச்சம் என்பது மடமையடா இந்த படங்கள் எல்லாம் சிம்புவின் கெரியரில் மிக முக்கியமான படம்.

ஆனால், ஒரு சிலர் இந்த படங்களை கூட கழுவி தான் உற்றினார்கள், அதன் கோபமோ என்னவோ AAA உருவாக அவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.

AAA விமர்சனங்கள் எல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ 10 கோடியை தாண்டவுள்ளது, எந்த ஒரு படமும் நெகட்டிவ் விமர்சனம் வர ஆரம்பித்தால் வசூல் பாதியாக குறையும்.

சிம்புவின் ரசிகர்கள் பலம் என்பது அனைத்து விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கியுள்ளது, இருந்தாலும், தன் ரசிகர்களின் தீவிர அன்பை புரிந்துக்கொண்ட சிம்பு நம் AAA விமர்சனத்தில் கூறியது போல் இனி வரும் காலங்களில் வானம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்று அவரிடம் நாம் எதிர்ப்பார்க்கும் படங்களில் நடிக்க வேண்டும்.

சிம்புவிற்கு AAA விமர்சனங்கள் வாயிலாக கசப்பான நிகழ்வுகளை கொடுத்திருந்தாலும், கண்டிப்பாக இந்த விமர்சனங்கள் எல்லாம் சிம்புவின் வளர்ச்சியில் 1% கூட பாதிப்பு ஏற்படுத்தாது என்பதே உண்மை, சிம்பு சீக்கிரம் பழைய மன்மதனா நீங்கள் வரவேண்டும், உங்களுக்காக உண்மையாக விசிலடிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்காக…