குப்பைகள் அதிகரிப்பால் டெங்கு உயிரிழப்புகள் அதிகம்-  சுகாதார அமைச்சர்

கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிகரித்து வரும் குப்பைகள்தான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் கொசுவினால் பரவக்கூடியது இந்த பிரச்னையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த ஏப்ரலில் கொழும்பில் குப்பை மேடு சரிந்ததில் 30-இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து, நகரில் குப்பைகளை அள்ளும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.

தெருக்களில் தேங்கும் அழுகிப்போன குப்பைகள் அதிகரித்து வருவதால் கொசுக்களின் இனப்பெருக்கும் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 200-இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.