விளையாட்டு வீரர்களை விமர்சிக்காதீர்கள்! நாமல் கோரிக்கை

அரசியல்வாதிகள் அரசியல் வேலைகளையும், உங்களது கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள், விளையாட்டு சம்பந்தமான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது பதிவை இட்டுள்ளார்.

விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் குறித்த விமர்சனங்களை தவிர்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில், இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளின் இலங்கை அணியின் வீரர்கள் தோல்வியடைந்தமையால், இலங்கை வீரர்கள், கொளுத்த உடலமைப்பை கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.