வீடு கிரகப்பிரவேசத்திற்கு ஆனி மாதம் உகந்ததா?

பொதுவாக ஆனிமாதம் என்பது கோவில் விழாக்களுக்கு உகந்ததாகும். திருமணம் செய்தவர்களை தனிக்குடித்தனம் வைக்கவும், வீடு பால் காய்ச்சுவதற்கும் உகந்தது அல்ல. கோவில் விழாக்கள், கும்பாபிஷேகங்கள் நடத்தலாம். ஆனி மாதம் இறைவனுக்கு விழா எடுத்தால் பலன் உடனடியாக கிடைக்கும்.

‘ஆனி அடி போட்டாலும் கூனிக் குடியேறாதே!’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் ஆனிமாதத்தில் அடி போடுவதும், பங்குனி மாதத்தில் குடியேறுவதும் கூடாது என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஆனி மாதத்தில் வீடு கட்டத் தொடங்குவது கூடாது. புதுவீடு குடியேறுவதும் கூடாது. திருமணங்கள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. இரண்டாவது பிள்ளையாக இருந்தால் திருமணம் செய்வதில் தவறில்லை.