இன்றைய ராசி பலன்கள் 12.06.2017

  • மேஷம்

    மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மாலையில் மகிழ்ச்சித் தொடங்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • கடகம்

    கடகம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கன்னி

    கன்னி: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோ
    கத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • தனுசு

    தனுசு: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

  • மகரம்

    மகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் வரும். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்
    பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிபாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

  • மீனம்

    மீனம்: உணர்ச்சிப்பூர் வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.