விவசாயிகள் போராட்டம்: அரசுக்கு நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை!!

இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும் என நடிகர் விஜய் மத்திய மோடி அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை என கவலை தெரிவித்தார்.

நாட்டில் பூதாகரமாக வெடித்திருக்கும் விவசாய பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது என கூறிய விஜய், அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் இன்று ரேஷனில் இலவச அரிசிக்காக காத்திருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

விவசாயிகளின் துயரத்தை கண்டும் காணாமல் நடித்தால், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.