நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களுக்கு தண்டனை கொடுப்பேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட சீமான் பேசியதாவது: தமிழகத்தில் சாதி கட்சிகள் சேர்ந்து நாட்டை ஆள முடியாது. மொத்த தமிழனும் சேர்ந்து ஒற்றை தமிழனுக்கு வாக்களித்து நாட்டை ஆள வேண்டும். அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.
வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு. இது தான் எங்கள் முதன்மை தத்துவமாகும். தமிழ்மொழி 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என அமெரிக்க மொழியியல் ஆய்வு அறிஞர் அலெக்ஸ் கூறியுள்ளார்.
மதம் பரப்ப வந்த கார்டுவெல் போப் ஆதியில் காடுகளில் வாழ்ந்து பிறகு நகரங்களை நோக்கி நகர தொடங்கியபோது அவர்கள் பேசிய மொழிகளில் இருக்கிற எழுத்து வடிவமும் இன்று வரை தமிழில் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு தமிழ் இனம் அடிமைப்பட்டு, அல்லல்பட்டு தன் இனப்பெருமை தெரியாது தாழ்ந்து போய் உள்ளது. நாட்டில் இன்னும் எத்தனையோ பேர் இரவு உணவின்றி இருக்கிறார்கள். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோர் எத்தனையோ பேர் உள்ளனர்.
எத்தனையோ பேர் உணவின்றி இறக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிப்பதை விட்டு மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சட்டம் இயற்றுகிறார் மோடி. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது அதன் பின் மாடுகளை விற்க தடை, விவசாயி எப்படி பிழைப்பான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு தண்டனை கொடுப்பேன். மக்கள் தனி மனித அபிமானங்கள், தனி மனித புகழ்ச்சியை விட்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.