ஆர்வக்கோளாறில் ‘காலா’ ரகசியத்தை வெளியிட்ட ஹூமா குரேஷி!

காலா படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹூமா குரேஷி.

கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் காலா. படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி துவங்கியது.

படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் மும்பையில் நடந்து வருகிறது.

காலா படம் குறித்த தகவலை ஹீரோயின் ஹூமா குரேஷி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஜரீனா என்பதை தெரிவித்துள்ளார்.