பா.ஜனதா 3 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் ஓட்டல் தொழில் பாதிக்கப்படும். இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஆன்லைனில் மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இது பேராபத்தில் முடிவடையும்.

பால் பிரச்சினையில் அமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் மக்களை பீதியடைய செய்துள்ளார். தகுந்த ஆவணங்கள் மூலம் தவறு இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும்.

3 ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சியில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம், எல்லையில் பிரச்சினைகள் என உள்ளது. இவற்றை மறைக்கவே மக்கள் விரும்பாத அறிவிப்புகளை மத்திய அரசு அறிவிக்கிறது.

விவசாயம் சார்ந்த அரசாக மத்திய அரசு இல்லை. மக்கள் விரும்பும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்படவில்லை. மத்திய அமைச்சர்களை சந்திப்பது தமிழக நலன்சார்ந்த சந்திப்பா அல்லது அமைச்சர்களின் நலன் சார்ந்த சந்திப்பா எனத் தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிகம் இடம் பிடிக்க மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.