உலக அளவில் போதைப் பொருள் பிரச்சனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். கடந்த ஆண்டு ரோட்ரிகோ டூடெர்ட் அதிபராக பதவியேற்றதிலிருந்து போதை பொருள் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
போதை பொருள் அதிரடி நடவடிக்கையில் ஆயிரக்கனக்கானோர் பொலிசாரால் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதிபரின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு நாடுகளும், அமெரிக்காவும் விமர்சனம் செய்து வந்தது.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்துக்கு எதிரான பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ மேற்கொண்டு வரும் அதிரடியான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
முன்னதாக 1,331 பவுண்ட்ஸ் மதிப்பிலான 604 கிலோகிராம் போதைப் பொருட்களை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மூலம் இன்று பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக இருநாடுகளிடையே கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் கூறினர்.







