நீரில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை பாராளுமன்றம்!

வெள்ள அபாயம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மழை காலநிலை காணரமாக தியவன்னா ஓயவின் நீர்மட்டம் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற நுழைவாயில் பகுதிகளில் மணல் மூட்டைகளை நிரப்பி கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமை குறித்து 20 பேர் கொண்ட குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மழை சற்று குறைவடைந்துள்ளதால் தியவன்னா ஓயவின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இன்றும், நாளையும் மழை எதிர்பார்க்கப்படுவதாகல் முன்னெச்சரிக்கையாக இருப்பதாக குறித்த பொலிஸ் அதிகரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றம் 1992 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.