40 வயதிற்குப் பிறகு 2000 ஆயிரம் ரன்னுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த மிஸ்பா

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் இன்றைய கடைசி ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

தற்போது மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது 351 நாட்கள் ஆகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001-ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் உடன் 75 டெஸ்டில் விளையாடி உள்ளார்.

35 வயதிற்குப் பிறகு (2009- 2017) அவர் 4509 ரன்கள் குவித்துள்ளார். கிரகாம் கூச் 4563 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 4139 ரன்களும் குவித்துள்ளனர்.

40 வயதிற்குப்பிறகு இரண்டாயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஜேக் ஹோப்ஸ் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளார்.