அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் அரிசி! நுகர்வோர் விசனம்

கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகளவில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசிக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்துள்ளது. எனினும் இந்தக் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஒரு கிலோகிராம் நாட்டரிசி 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென அரசாங்கம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

எனினும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 85 ரூபா முதல் 90 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பா அரிசி ஒரு கிலோ 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென அரசாங்கம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

ஆனாலும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 95 ரூபா முதல் 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கீரி சம்பா ஒரு கிலோ ஒவ்வொரு விலைகளில் விற்பனை செய்பய்படுகின்றது.

கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கே அரிசி உற்பத்தியாளர்கள் தமக்கு அரிசி வழங்குவதாக அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு அரிசி வகைகளை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும், அரசாங்கத்தின் நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோகிராம் அரிசியை உற்பத்தி செய்ய சுமார் 85 ரூபா செலவாகின்றது என அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.