ஆவணப்பதிவுகள் உரியமுறையில் செய்யப்பட்டிருக்குமானால், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை கிடைப்பதில் எவ்வித தடைகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாளையதினம் இந்த சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் இறுதித்தினமாக உள்ளது.
ஏற்கனவே இந்த சலுகையை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதியை வழங்கி விட்டனர்.
2010 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை மீளப்பெறப்பட்ட பின்னர் இலங்கையில் 25 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் சுமார் பத்தாயிரம் பேர் தமது தொழில்களை இழந்தனர்.
இந்த நிலையில் குறித்த சலுகை கிடைத்த பின்னர் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 20 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்று ஆடைத்தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.







