ரஜினியின் `2.0′ படம் குறித்த முக்கிய தகவல்

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `எந்திரன்’ படத்தின் இரண்டாவது பாகமான `2.0′ படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வருகிறார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் `2.0′ படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜு மகாலிங்கம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் வெளியாக இருக்கிறது.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் இப்படத்தின், டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் `2.0′ படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டு தற்போது, டப்பிங் பணிகளில் இறங்கி இருப்பதாக புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

`3டி’ வடிவிலும் வெளிவர இருக்கும் இப்படத்தை, ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியிட படக்குழு யோசித்து வருகிறது.