முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக நினைவாலயம் ஒன்றை அமைப்பது தொடர்பாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 3 வருடங்கள் கடந்த நிலையிலும், நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் கூட இதுவரை எடுக்கப்படாமல் வெற்று தீர்மானமாகவே உள்ளது என சுட்டிக்காட்டி மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர்.
இதேவேளை வடமாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றும் ஒரு சபையாகவே இருப்பதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டு அரசாங்க தரப்பாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கான தீர்மானம் வடமாகாண சபையில் 2014.01.27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
கடந்த அரசாங்க காலத்தில் சவால்களுக்கு மத்தியில் மாவீரர் தினத்தை அன்றைய தமிழ் தரப்பினர் நினைவு கூர்ந்த நிலையில் மாகாண சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அச்சமயம் தெற்கில் உள்ள இனவாதிகளால் வடமாகாணசபை எல்லை மீறி செயற்படுவதாகவும், இதனை தடுக்கவேண்டும் எனவும் கூறி பகிரங்கமாக கூ றியிருந்தனர்.
இவ்வாறு இக்கட்டான நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போதைய அரசு மாவீரர் தினத்தை நினைவு கூர அனுமதித்திருக்கும் நிலையில் நினைவாலயத்தை அமைக்காது இருக்கின்றனர்.
இது வடமாகாணசபை தீர்மானங்களை நிறைவேற்றும் ஒரு சபையாகவே உள்ளது என்பதை காண்பிப்பதாகவே உள்ளது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்காக மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினரது.
ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது மாகாணசபை அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கின்றது.
மேலும் சில விடயங்களை இரகசியமாக மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையினாலேயே மாகாணசபை இது தொடர்பாக வெளிப்படையாக நடவடிக்கை எடுப்பதில்லை. என ரவிகரன் கூறியுள்ளார்.







