தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சி நடைபெறுவதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்று அனைத் துக்கட்சி பொதுக்கூட்டத்தில் விமர்சித்தார்.
அதற்கு பதிலளித்து சென்னையில் இன்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:-
தமிழகத்தில் இப்போது பா.ஜனதா பினாமி ஆட்சி நடப்பதாக கூறினால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது தமிழகத்தில் தி.மு.க பினாமி ஆட்சி நடத்தியதா?
தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலைக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. அ.தி.மு. க. வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜனதா தலையிடாது.
தமிழகம் வளர்ச்சி பெற வேண்டுமானால் நிலையான ஆட்சி தேவை. தமிழகத்தில் நிலையான ஆட்சி நடக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம்
உத்திரபிரதேசத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தது அந்த மாநில அரசுதான். அதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.